ஜேர்மனியில் கோர விபத்து…! 2 பேர் பலி

0

ஜேர்மனியில் Leipzig நகரில் மக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் 2 பேர் பலியாகிய நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

Prager தெருவில் பொது போக்குவரத்து நிறுத்தத்தின் அருகே மக்கள் கும்பலாக நின்றுக் கொண்டிருந்த திடீரென கார் ஒன்று பயங்கர வேகத்தில் புகுந்துள்ளது.

அந்த காரை 50 வயதுடைய நபர் ஓட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவத்தை தொடர்ந்து பொலிசார் அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர் மற்றும் மீட்பு பணிக்காக ஹெலிகாப்டரை அனுப்பி வைத்துள்ளனர்.

அதனால் கார் மக்கள் கூட்டத்திற்கு புகுந்தது என்பது தற்போது வரை தெளிவாக தெரியவில்லை.

அதேசமயம், சட்ட அமுலாகத்துறை அதிகாரிகள், இந்த சம்பவத்தை விபத்து என்று கருதுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here