ஜேர்மனியில் கோர விபத்து…! 31 கார்களின் மீது மோதிய டிரக் சாரதி!

0

தெற்கு ஜேர்மனியின் Fuerth பகுதியில் டிரக் சாராராதி ஒருவர் குடிபோதையில் வாகனம் ஒட்டி 31 கார்களை இடித்து விபத்துக்குள்ளாக்கியுள்ளார்.

இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பெப்ரவரி 8 ஆம் திகதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகளின் தெரிவி்கையில், போதையில் இருந்த டிரக் டிரைவர் சிவப்பு விளக்கைப் புறக்கணித்து வேகமாக சென்றுள்ளார்.

பின்னர், பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட கார்கள் மீது தனது வாகனத்தை மோதி, கட்டிடங்களுக்கு எதிராக கார்களைத் தள்ளி பெரும்விபத்தை ஏற்படுத்தினார்.

அதில் 31 கார்கள் சேதமடைந்தன.

கட்டிடங்கள் சேதமடைந்து, அவற்றில் சில கார்கள் தீப்பிடித்து எரிந்தன.

அங்கிருந்த ஒரு சில வீடுகளில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, ஜேர்மனியில் நிரந்தர குடியிருப்பு இல்லாத 50 வயதான துருக்கிய குடிமகனான அந்த டிரக் டிரைவர், சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆல்கஹால் குழாய் கருவியின் மூலம் சோதனை செய்யப்பட்டதில் அவர் பயங்கரமாக குடித்திருந்தது தெரியவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here