ஜேர்மனியில் கோர விபத்து… பிரபல தொலைக்காட்சி அழகிக்கு நேர்ந்த கதி

0

ஜேர்மனியில், ‘Berlin: Day and Night’ என்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் Julia Jasmin Ruehle (33).

நேற்று நெடுஞ்சாலை ஒன்றில் காரில் அதிவேகமாக பயணித்துள்ளார்.

அப்போது, கார் கட்டுப்பாட்டை இழக்க, நெடுஞ்சாலையில் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தடுப்பின் மீது அது பயங்கரமாக மோதியுள்ளது.

அந்த தடுப்பின் மீது பயங்கரமாக மோதியதில், Juliaவின் கார் பல முறை சாலையில் உருண்டுள்ளது.

இந்த பயங்கர விபத்தில் Julia படுகாயமடைந்த நிலையிலும், காரிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு வெளியேறியுள்ளார்.

Julia படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், தற்போது அவருடைய உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ள Juliaவாலும், இனி எப்போது மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலும் என்பது தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here