ஜேர்மனியில் கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பில் மெர்க்கல் திட்டவட்டம்

0

ஜேர்மனியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கட்டாயமாக்காது என அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவிக்கையில்,

ஜேர்மனி மக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்வது உறுதி செய்யப்படும்.

அதற்காக, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளைப் போல் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்வதை ஜேர்மனி கட்டாயமாக்காது.

இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்வதில் விருப்பமில்லை.

மாறாக சமூக இடைவெளியைக் கடைபிடித்தலை உறுதி செய்தல், பரிசோதனை மற்றும் கண்காணிப்பை அதிகரித்தலை செய்வோம் என்று கூறியுள்ளார்.

தடுப்பூசியை விளம்பரப்படுத்துவதன் மூலமும், முடிந்தவரை மக்கள் தங்கள் சொந்த அனுபவத்திலிருந்து தடுப்பூசிக்கான தூதர்களாக ஆவதன் மூலமும் நாங்கள் நம்பிக்கையைப் பெற முடியும் என்று நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில் ஜேர்மனியில் டெல்டா வைரஸ் காரணமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

4வது அலையை நோக்கி நாடு செல்வதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெல்டா வைரஸைக் கட்டுப்படுத்த 85% வளந்தோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here