ஜேர்மனியில் கத்தி குத்து தாக்குதல்….! மக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

0

ஜேர்மனியின் Thuringia மாநிலத்தில் உள்ள Erfurt நகரில் கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திங்கட்கிழமை காலை 6 மணிக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர், சாலையில் சென்ற இருவரை கத்தியால் தாக்கிவிட்டு சம்பவயிடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.

காயமடைந்த 45 மற்றும் 68 வயதுடைய இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களின் நிலை குறித்து தற்போது வரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

நகர மக்களை எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தியுள்ள பொலிசார், தப்பியோடி மர்ம நபரை ஹெலிகாப்டர் உதவியுடன் தேடி வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை ஜேர்மனியின் பவாரியா பிராந்தியத்தில் உள்ள வர்ஸ்பர்க் நகரில் நடந்த கத்திக் குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here