ஜேர்மனியில் கத்தி குத்து சம்பவம்… 3 பேர் பலி!

0

ஜேர்மனியில் பயங்கர சம்பவத்தால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஆறு பேர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியின் Wurzburg நகரின் Barbarossaplatz-ல் இந்த சம்பவம் நடந்துள்ளது.

முகக்கவசம் அணிந்திருக்கும் அந்த நபர், கையில் ஒரு பெரிய நீள கத்தியுடன், அங்கிருக்கும் மக்களை கத்தியால் குத்து முயற்சி செய்வதை பார்க்க முடிகிறது.

இந்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசாரையும், அந்த நபர் தாக்க முயற்சித்துள்ளான்.

இதனால் பொலிசார் அவரின் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.

அந்த நபர் யார் என்பதும், எதற்காக இந்த கொடூர செயலை செய்தார் என்பது குறித்து எந்த ஒரு விவரமும் வெளியாகவில்லை.

தற்போது பொலிசார் அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here