ஜேர்மனியில் ஏற்படவுள்ள மிகப்பெரிய ஆபத்து… எச்சரிக்கும் நிபுணர்கள்…

0

ஜேர்மனியில் பெப்ரவரி மாதத்தில் கொரோனா வைரஸால் மிகப்பெரிய பிரச்சினை ஏற்படலாம் என சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.

கடந்த 24 மணிநேரத்தில் (வெள்ளிக்கிழமை) புதிதாக 140,160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதே வேகத்தில் சென்றால், வரும் பிப்ரவரி மாத நடுப்பகுதியிலேயே, நாள் ஒன்றுக்கு குறைந்தது 400,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படலாம் என சுகாதார அமைச்சர் Karl Lauterbach எச்சரித்துள்ளார்.

வரும் வாரங்களில் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக லாட்டர்பாக் கூறினார்.

ஜேர்மனியில் இதுவரை 116,000க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு, ஜேர்மனியில் தினசரி 92,223 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

தொற்று நோய்களுக்கான ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (RKI) படி, ஜேர்மனியின் மக்கள் தொகையில் சுமார் 73% பேர் கொரோனா வைரஸுக்கு எதிரான அடிப்படை நோய்த்தடுப்பு மருந்துகளை (முழுமையாக இரண்டு தடுப்பூசிகள்) பேருள்ளனர். மேலும் 49% பேர் பூஸ்டர் ஷாட் பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here