ஜேர்மனியில் ஊரடங்கு தளர்வு தொடர்பில் அரசின் முக்கிய அறிவிப்பு

0

ஜேர்மனியில் வார இறுதி நாட்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டது.

எனினும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

3வது அலையை கட்டுப்படுத்த வார இறுதியில் விதிக்கப்பட்ட நடவடிக்கைகள் தேவை என்று சமீபத்தில் கூறிய அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், அதிக தொற்று வீதங்களைக் கொண்ட பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான விதிகளை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தினார்.

நிதியமைச்சர் Olaf Scholz தெரிவிக்கையில் எப்படி இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது என நமக்கு ஒரு கால அட்டவணை தேவை, அது சில தினங்களில் திரும்பப்பெறப்படாத அளவிற்கு ஒரு திட்டமாக இருக்க வேண்டும்.

உணவகங்களை மீண்டும் திறக்க மற்றும் மக்கள் விடுமுறை நாட்களுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடும் வகையில் மே மாத இறுதிக்குள் கோடைகாலத்திற்கான தெளிவான கடைகளை திறக்கும் நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்ட அரசாங்கத்தால் முடிய வேண்டும் என Olaf Scholz கூறியுள்ளார்.

Olaf Scholz அளித்த தகவலின் மூலம் மே மாத இறுதிவரை ஜேர்மனியில் ஊரடங்கு தளர்த்தப்படாது என்பது தெளிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here