ஜேர்மனியில் ஈஸ்டர் பண்டிகை தொடர்பில் ஏஞ்சலா மெர்கலின் அறிவிப்பு

0
German Chancellor Angela Merkel arrives to lead the weekly cabinet meeting at the Chancellery in Berlin, Germany January 6, 2021. John Macdougall/Pool via REUTERS

ஜேர்மனியில் ஏப்ரல் 18-ஆம் திகதி வரை கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீடிக்கப்படுகின்றது.

அதே சமயம், ஈஸ்டர் பண்டிகைக்கு ஏப்ரல் 1 முதல் 5 வரை கடுமையான பணிநிறுத்தத்தை மேற்கொள்ள உள்ளதாக அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார்.

கலாச்சார, கொண்டாட்டம் மற்றும் விளையாட்டு வசதிகளை மூடி வைப்பது உள்ளிட்ட தற்போதைய நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதோடு, மெர்கல் மற்றும் ஜேர்மனியின் 16 மாநில தலைவர்கள் இந்த 5-நாள் கடுமையான பணிநிறுத்தத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட அனைத்து கடைகளும் மூடப்படும்.

ஏப்ரல் 3 சனிக்கிழமையன்று மளிகைக்கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும்.

மேலும், ஈஸ்டர் பண்டிகையின்போது மத சேவைகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் மெர்கல் கூறியுள்ளார்.

ஜேர்மனி தற்போது பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதாரமான ஜேர்மனி தற்போது கொடுந்தொரரின் பிடியில் சிக்கியுள்ளது என்று மெர்கல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here