ஜேர்மனியில் இரு இளம் பொலிஸார் சுட்டுக்கொலை.. பரபரப்பு சம்பவம்!

0

மேற்கு ஜேர்மனியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கிராமப்புற சாலையில் இரண்டு பொலிஸ் அதிகாரிக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்

இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திங்கட்கிழமை அதிகாலை 4.20 மணியளவில் குசெல் அருகே போக்குவரத்து சோதனையின் போது துப்பாக்கிச் சூடு நடந்ததாக கைசர்ஸ்லாட்டர்னில் உள்ள பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை அதிகாரிகள் ரேடியோ மூலம் ஒளிபரப்பியுள்ளனர்.

சக ஊழியர்களிடம் “அவர்கள் எங்களை நோக்கி சுடுகிறார்கள்” என்று கூறுவது கேட்டதாக ஒரு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களில் ஒருவர் 24 வயது பெண், மற்றோருவர் 29 வயது ஆண் அதிகாரி என்றும், இருவரும் சக அதிகாரிகள் வருவதற்குள் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

பெண் அதிகாரி கண்டுபிடிக்கப்பட்டபோது தனது துப்பாக்கியை அதன் ஹோல்ஸ்டரில் வைத்திருந்தார்.

அவர் கொல்லப்படுவதற்கு முன்பு ஆண் அதிகாரி பல துப்பாக்கிச் சூடுகளைச் செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திங்கள்கிழமை மதியம், சார்லாண்ட் மாநிலத்தில் உள்ள ஸ்பீசென்-எல்வெர்ஸ்பெர்க் நகரில் ஒரு பேக்கரி நடத்தும் 38 வயதான Andreas Johannes Schmitt எனும் சந்தேக நபரின் படத்தை பொலிஸார் வெளியிட்டனர்.

குற்றம் நடந்த இடத்தில் சந்தேக நபரை அடையாளம் காணும் ஆவணங்களை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

இரண்டு பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Saarland மாநிலம் முழுவதும், கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here