ஜேர்மனியில் இயற்கைச் சீற்றத்தால் உருவாகியுள்ள புதிய அச்சம்….

0

ஜேர்மனியில் இயற்கைச் சீற்றத்தால் பேரழிவு உருவாகியுள்ளது.

இந்நிலையில் மீட்புப் பணியால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அச்சம் எழுந்துள்ளது.

மீட்புப் பணிகளில் ஈடுபடுவோர் சரியான சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றாமல் மீட்புப் பணிகளைச் செய்து வருவதால், மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது.

மக்களை மீட்க்கும் போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை வலியுறுத்தினால் அது பணி செய்வோரை வெறுப்படையச் செய்து மீட்புப் பணியை பாதிக்கும் என கருதுகின்றனர்.

பெருவெள்ளம் வீடுகளை மட்டுமல்ல, கொரோனாவையும் அடித்துச் சென்றுவிட்டது என மீட்புப் பணியில் ஈடுபடும் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவசர நகரும் தடுப்பூசி மையங்களை நடத்தி வரும் Olav Kullak என்பவர், எல்லாமே அடித்துப்போய்விட்டது என்பது உண்மை.

ஆனால் கொரோனா வைரஸ் போகவில்லை என்பதை மக்களுக்கு அறிவுறுத்தவேண்டும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் அரசு செய்தித்தொடர்பாளரான David Freichel, மக்கள் மீட்பு பணிக்காக நெருக்கமாக களத்தில் இருக்கிறார்கள்.

பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவை மேற்கொள்ள எடுக்கும் நடவடிக்கை கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்கவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here