ஜேர்மனியில் இந்திய மாணவருக்கு நேர்ந்த கதி

0

வாரங்கல் மாவட்டம் கரீமாபாத் பகுதியைச் சேர்ந்த பரசுராமுலு – வானம்மா தம்பதியின் மகன் கடாரி அகில் (26).

ஜேர்மனியில் ஓட்டோ வான் வூரிக் பல்கலைக்கழகத்தில் எம்எஸ் படிப்பதற்காக ஜெர்மனி சென்றார்.

சோலார் எனர்ஜி இறுதியாண்டு படித்து வந்துள்ளார்.

அவரது தந்தை பருசுராமுலின் கூற்றுப்படி, அகில் மற்றும் அவரது நண்பர்கள் தங்கள் தேர்வுகளை முடித்துவிட்டு சுற்றுலாவுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் ஆற்றங்கரையில் நின்று செல்ஃபி எடுக்கும்போது, ​​பலத்த நீரோட்டத்தில் அகில் ஆற்றில் தவறி விழுந்தார்.

2018-ஆம் ஆண்டு வாரங்கல் கிட்ஸ் கல்லூரியில் பிடெக் முடித்த அகில், அதே ஆண்டு மாக்டேபர்க்கில் உள்ள ஓட்டோ வான் குரிக்கே பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் ஆற்றல் பொறியியலில் முதுகலைப் படிப்பதற்காகச் சென்றார்.

இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து MAUD அமைச்சர் கேடி ராமராவ் ட்வீட் செய்துள்ளார்.

இதற்கு ஜேர்மனி அதிகாரிகள், தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாக பதிலளித்தனர்.

வாரங்கல் கிழக்கு எம்எல்ஏ நன்னபுனேனி நரேந்தர் அகிலின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கே.டி.ராமராவ்விடம் தெரிவித்துள்ளனர்.

இந்திய தூதரகத்துடன் பேசி காணாமல் போன இளைஞரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here