ஜேர்மனியில் அமுலுக்கு வரும் புதிய தடை….!

0

ஜேர்மனி தலைநகர் பெர்லினில் வெள்ளிக்கிழமை முதல் மக்கள் இரவில் வெளிப்புறங்களில் கூட தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனாவின் 3வது அலையை தடுக்கும் முயற்சியில் அடுத்த வாரம் முதல் நர்சரியில் குழந்தைகளின் எண்ணிக்கையை குறைக்கப்படவுள்ளதாகவும் ஜேர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேசமயம், கடந்த மாதம் முதல் ஜேர்மனியில் பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தீவிர மற்றும் அவசர மருத்துவத்திற்கான DIVI அமைப்பு, ஜேர்மனியில் உடனடியாக இரண்டு வாரங்கள் ஊரடங்கு அமுல்படுத்த வேண்டும்.

தடுப்பூசி போடும் பணிகள் விரைப்படுத்த வேண்டும் மற்றும் பள்ளிகளில் கட்டாய சோதனைகள் தேவை என்று கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் பெர்லின் நகர அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை விரைவில் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியிட்டுள்ளன.

இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் தனியாக அல்லது வேறு ஒருவருடன் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த கட்டுப்பாடடில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது உட்புறங்களில் இரண்டு வீடுகளைச் சேர்ந்த ஐந்து பேர் சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த செவ்வாய்க்கிழமை முதல், மக்கள் தங்கள் வீட்டார் தவிர வெளியில் இருந்து ஒரு நபருடன் மட்டுமே வீட்டுக்குள் சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஒரு வருடத்திற்கு முன்னர் தொற்றுநோய் தொடங்கிய பின்னர் பெர்லினில் விதிக்கப்பட்ட முதல் வரையறுக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இதுவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here