ஜேர்மனியில் அதிகரிக்கும் பொருட்களின் விலை… வரிசையில் காத்திருக்கும் மக்கள்

0

உக்ரைன் ரஷ்ய போரால் ஐரோப்பிய நாடுகளில் பொருட்களின் விலைவாசி உயர்ந்துவருகின்றது.

இந்நிலையில், ஜேர்மனியில் மக்கள் உணவு வங்கிகள் முன் உணவுக்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.

பல்பொருள் அங்காடிகள் இலவசமாக வழங்கிய மளிகைப் பொருட்கள், விலை மலிவான உணவுப் பொட்டலங்கள் ஆகியவை உணவு வங்கிகளில் மிகக் குறைவான விலையில் விற்கப்படுகின்றன.

வாடிக்கையாளர்கள் 30 யூரோக்களுக்கு ஒரு ட்ராலி முழுவதுமான உணவை எடுத்துக்கொள்ள முடியும்.

தற்போது ஜேர்மனியில் பணவீக்கம் 7.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், உணவுப் பொருட்களின் விலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உணவு வங்கிகளின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

இப்போதைக்கு சுமார் 1,000 உணவு வங்கிகள் தன்னார்வலர்களால் நடத்தப்படுகின்றன.

பொதுவாக உணவு வங்கிகள் தங்களுக்கு தானமாக கொடுக்கப்பட்ட உணவுப்பொருட்களை இலவசமாகத்தான் மக்களுக்கு வழங்கும்.

ஆனால், அந்த உணவு வங்கிகள் இயங்குவதற்கே வாடகை, மின் கட்டணம் போன்ற விடயங்களுக்காக பணத்தேவைப்படுகின்றது.

தற்போது இலவசமாக உணவுப்பொருட்களை வழங்குவதற்கு பதிலாக, அவை குறைந்த விலைக்கு உணவுப்பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here