ஜேர்மனியின் செயலால் கடும் கோபத்தில் அமெரிக்கர்கள்!

0

தாலிபான்களால் கைப்பற்றப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்பட்டுள்ள ஆப்கன் மக்களுக்காக, ஜேர்மனியில் ஒரு தற்காலிக தங்குமிடம் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஜேர்மனியில் அமெரிக்கா அமைத்துள்ள விமானத்தளம் ஒன்றை தற்காலிக தங்குமிடமாக இராணுவ வீரர்களும் தன்னார்வலர்களும் மாற்றிவருகிறார்கள்.

அதற்காக, டாய்லட் பேப்பர்கள் முதல் கால்பந்து முதல் பல விடயங்களை மக்கள் நன்கொடையாக வழங்கி வருகிறார்கள்.

Ramstein Air Base என்ற அந்த விமான தளத்தில், சுமார் 5,000 பேர் முதலில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட உள்ள நிலையில், பிறகு அவர்கள் நிரந்தர தங்குமிடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என பெர்லினிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த செய்தியில் வருத்தத்தை அளிக்கும் ஒரு விடயம் என்னவென்றால், இந்த செய்தி குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கர்கள், மோசமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.

ஒருவர், அவர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வராதீர்கள், நம் நாட்டிலுள்ள நகரங்களை அவர்களுக்காக காபூலாக மாற்றவேண்டுமா என்று கேட்கிறார்.

மற்றொருவர், அவர்களுக்கு அமெரிக்காவில் வரவேற்பு இல்லை, அவர்கள் ஜேர்மனியிலோ ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலோ தங்கவைக்கப்படட்டும் என்கிறார்.

இன்னொருவர், அவர்கள் அமெரிக்காவுக்கு வரவேண்டாம், மெர்க்கல் அவர்களை கவனித்துக்கொள்வார் என்கிறார்.

அவர்கள் விமான தளத்தில் அமைக்கப்பட்ட முகாமுக்கு வந்ததும், அவர்களை ஜேர்மனிக்குள் அனுப்பிவிடுங்கள் என ஒருவரும், சவுதி அரேபியாவுக்கு அவர்களை அனுப்பிவிடுங்கள் என மற்றொருவரும் தெரிவிப்பதிலிருந்து ஆப்கனிலிருந்து மீட்கப்பட்டவர்கள் குறித்த அமெரிக்கர்களின் மன நிலை தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here