ஜேர்மனிக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்வு!

0

ஜேர்மனிக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இந்த வாரம் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட அல்லது ஆன்டிபாடிகளைக் கொண்ட பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் புதன்கிழமை முதல் தனிமைப்படுத்தப்படாமல் ஜேர்மனிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த இரண்டு வகைகளிலும் சேராத சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

ஆனால், 5 நாட்களுக்குப் பிறகு PCR சோதனையில் கொவிட் நெகட்டிவ் என முடிவு காணப்பட்டால் கட்டாயம் 10 நாள் தனிமைப்படுத்தலைக் குறைக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

ஜேர்மனி தற்போது பிரித்தானியாவின் மஞ்சள் பட்டியலில் (Amber List) உள்ளது.

ஜேர்மனியில் இருந்து பிரித்தானியாவுக்கு வரும் மக்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும்.

அதேபோல், 5 நாட்களுக்குப் பிறகு PCR சோதனையில் கோவிட் நெகட்டிவ் என முடிவு வந்தால், தொடர்ந்து தனிமைப்படுத்த வேண்டியது இல்லை.

ஏஞ்சலா மேர்க்கெல், அதிக ஆபத்து கொண்ட வைரஸ் மாறுபாடு உள்ள பகுதிகள் என்ற பட்டியலில் இருந்த பிரித்தானியா, இந்தியா, போர்ச்சுகல், ரஷ்யா மற்றும் நேபாளம் ஆகிய 5 நாடுகளை, இப்போது அதிக பாதிப்புக்குள்ளான பகுதிகள் என்ற வகைக்குள் சேர்த்துள்ளார்.

கடந்த வாரம் ஏஞ்சலா மெர்கல் மற்றும் போரிஸ் ஜான்சன் இருவரும் நேரில் சந்தித்து பேசியதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவில் இருந்து ஜேர்மனிக்கு பயணிக்கும் மக்கள் மீதான கட்டுப்பாடுகள் புதன்கிழமை முதல் ஜூலை 7 ஆம் திகதி தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here