ஜெய் பீம் படத்தில் அதிரடி மாற்றம் செய்த படக்குழு

0

ஜெய் பீம் படத்தில் நடிகர் சூர்யா, இருளர் பழங்குடி மக்களுக்காக வாதாடும் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜெய் பீம்’. பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்து வெகுவாக பாராட்டினர்.

இதனிடையே, ஜெய் பீம் படத்தில் பழங்குடியினர்களை சித்திரவதை செய்யும் குருமூர்த்தி என்கிற போலீஸ் கதாபாத்திரம் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் போல் படத்தில் காட்டப்பட்டு இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. படத்தில் ஒரு காட்சியில் அவர் தொலைபேசியில் பேசும்போது பின்னணியில் வன்னியர் சங்க காலண்டர் இடம்பெற்றிருக்கும், இதுவே எதிர்ப்புக்கும் காரணமானது.

இதையடுத்து அந்த காட்சியில் படக்குழு மாற்றம் செய்துள்ளனர். அந்த காலண்டரில் வன்னியர் சங்க குறியீடுக்கு பதிலாக சாமி படம் இருப்பது போல் மாற்றி அமைத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். ஜெய் பீம் படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் பா.இரஞ்சித் உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here