ஜப்பானை தாக்கிய சக்திவாய்ந்த புயல்! இருளில் மூழ்கிய வீடுகள்…

0

ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கியாஷூ தீவை நான்மடோல் புயல் தாக்கியுள்ளது.

ணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியுள்ளது.

புயல் காற்றில் சிக்கி நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

மின்கம்பங்கள் சரிந்துள்ளன.

கட்டிடங்களின் மேற்கூரைகள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன.

சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழந்தது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

புயலால் பல்வேறு சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

புயல், மழையைத் தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.

புயல், மழை மற்றும் வெள்ளத்தால் கியாஷூ தீவில் உள்ள பல்வேறு நகரங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.

இந்நிலையில், இந்தப் புயலில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

அவர்களில்14 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருமின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here