ஜப்பானில் விரைவில் நடைப்பெறவுள்ள ஒலிம்பிக் தொடர்…

0

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் தொடரை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் ஐந்து வாரங்களுக்கு முன்னதாக அவசர நிலை அறிவிப்பு திருப்பப் பெறப்படும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளத

ஜூலை 11ஆம் திகதி வரை சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும்

பெரிய நிகழ்ச்சிகளில் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்படும்.

கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் ஜப்பானின் தலைநகரான டோக்கியோ மற்றும் பிற பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த அவசரநிலை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திரும்பப் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மக்களை தொலைக்காட்சியில் போட்டிகளை கண்டு களிக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் சர்வதேச பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக், எதிர்வரும் ஜூலை மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

பாரா ஒலிம்பிக், ஒகஸ்ட் மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here