தற்போது பல நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜப்பான் நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு தடைவிதித்துள்ளது.
இந்நிலையில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணங்களுக்கு ஜப்பான் விதித்துள்ள தடை அரசியலமைப்பை மீறவில்லை என ஒசாகா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஓரினச்சேர்க்கை தம்பதிகள் மற்றும் உரிமை ஆர்வலர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு அடியாக இருந்தது.
சப்போரோவில் உள்ள மற்றொரு மாவட்ட நீதிமன்றம் 2021 இல் ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்கத் தவறியது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பளித்தது.
வளர்ந்த நாடுகளின் G7 குழுவில் ஒரே பாலினத்தவர்களை திருமணம் செய்ய அனுமதிக்காத ஒரே நாடு ஜப்பான் ஆகும்.
ஜப்பானில் பொது மக்கள் ஒரே பாலின திருமணத்தை அனுமதிப்பதற்கு ஆதரவாக இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரியவந்துள்ளது.
பல பகுதிகள் அதாவது டோக்கியோ உட்பட ஒரே பாலின தம்பதிகள் சொத்துக்களை வாடகைக்கு எடுப்பதற்கும் மருத்துவமனை வருகை உரிமைகளைப் பெறுவதற்கும் கூட்டாண்மைச் சான்றிதழ்களை வழங்கத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.