ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை

0

ஜப்பானின் கிழக்குக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள Miyagi என்ற பகுதிக்கு அருகிலுள்ள பசிபிக் பெருங்கடலில், 60 கிலோமீற்றர் ஆழத்தில் சக்திவாந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடலின் அடியில் ஏற்படும் நிலநடுக்கம் சுனாமியை உருவாக்கும் என்பதால், அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலில் அலைகள் ஒரு மீற்றர் உயரத்திற்கு எழும்பும் என ஜப்பான் தகவல் ஒளிபரப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் Miyagi பகுதி பெருமளவில் பாதிக்கப்பட்டது.

அப்போது 15,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

மக்கள் யாரும் கடலின் அருகில் செல்லவேண்டாம் மேலும் மீன்பிடிக்கவோ குளிக்கவோ சென்றிருந்தால் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here