ஜப்பானில் ஒலிம்பிக் விளையாட வரும் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு திட்டம்

0
FILE PHOTO: A man wears a protective mask amid the coronavirus (COVID-19) outbreak in front of the giant Olympic rings in Tokyo, Japan, January 13, 2021. REUTERS/Kim Kyung-Hoon//File Photo

ஜப்பானில் டோக்கியோவில் வரும் 23-ஆம் திகதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில், கொரோனா பரவாமல் இருக்க சமூக இடைவெளி மிகவும் முக்கியம், அதை ஊக்குவிக்கும் வகையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியாளர்கள், வீரர்கள் வெளியில் செல்லும்போது ஆணுறைகள் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி விளையாட்டு வீரர்கள் உறங்குவதற்கான படுக்கையை பாலியல் எதிர்ப்பு படுக்கையாக வடிவமைத்துள்ளனர்.

இது விளையாட்டு வீரர்கள் உடலுறவு கொள்வதை தவிர்ப்பதற்கான யோசனை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பாலியல் எதிர்ப்பு படுக்கைகள் cardboard அட்டைகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒருநபரின் எடையை மட்டுமே இந்த படுக்கை தாங்கும். இதனால் ஒருவருக்கு மேல் அந்த படுக்கையில் உட்காரவோ, தூங்கவோ முடியாது.

இந்த புகைப்படங்களை எல்லாம் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக் கொள்வதற்காக டோக்கியோ சென்றிருக்கும் அமெரிக்க ஸ்ப்ரிண்டர் Paul Chelimo, தன்னுடைய டுவிட்டர் பதிவிட்டுள்ளார்.

அதில், டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் இருக்கும் படுக்கைகள் அட்டைப் பெட்டியால் செய்யப்பட்டுள்ளது.

இது விளையாட்டு வீரர்களிடையே நெருக்கத்தைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here