ஜப்பானிற்கு சென்ற ஒலிம்பிக் குழு உறுப்பினருக்கு கொரோனா…

0

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கெடுப்பதற்கான ஜப்பானுக்கு சென்றிருந்த உகாண்ட ஒலிம்பிக் அணியின் உறுப்பினர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் ஐந்து வாரங்கள் உள்ளது.

இந்நிலையில் போட்டிகளில் பங்கெடுக்க வரும் வீரர்கள் மற்றும் உறுப்பினர்களில் கண்டறியப்பட்ட முதல் கொரோனா தொற்று அடையாளம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உகாண்டாவிலிருந்து டோக்கியோவின் நரிட்டோ விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 20 ஆம் திகதி தரையிறங்கிய ஒன்பது பேர் கொணட குத்துச் சண்டை வீரர்கள் கொண்ட குழு உறுப்பினர் ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த ஜூன் முதலாம் திகதி அவுஸ்திரேலிய மகளிர் சாப்ட்போல் அணியினருக்கு பின்னர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கெடுக்க ஜப்பானுக்கு சென்ற இரண்டாவது குழு இதுவாகும்.

இந்த குழு அனைவருக்கும் ஜப்பானுக்கு வருவதற்கு முன்பு உகாண்டாவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு, சோதனையில் எதிர்மறையான முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here