ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய தலிபான்கள்! யுத்தம் முடிவிற்கு வந்துள்ளதாக அறிவிப்பு

0

தலிபான் தீவிரவாதிகள் ஆப்கான் தலைநகர் காபுலில் ஜனாதிபதி மாளிகையை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதுடன் யுத்தம் முடிவிற்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இன்று ஆப்கான் மக்களுக்கும் முஜாஹிதீன்களுக்கும் முக்கிய நாள் 20 வருட தியாகத்தின் பலாபலன்களை அவர்கள் அடைந்துள்ளனர் என தலிபான் அரசியல் அலுவலகத்தை சேர்ந்த முகமட் நயீம் தெரிவித்துள்ளார்.

இறைவனிற்கு நன்றி நாட்டில் யுத்தம் முடிவிற்கு வந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய ஆட்சி குறித்த விபரங்கள் விரைவில் வெளிவரும்,என தெரிவித்துள்ள அவர் தலிபான் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் செயற்படவிரும்பவில்லை,என அவர் தெரிவித்துள்ளார்.

அமைதியான சர்வதேச உறவுகளிற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

நாங்கள் எதற்காக முயற்சி செய்தோமோ அதனை அடைந்துவிட்டோம்,எங்கள் நாட்டினதும் மக்களினதும் சுதந்திரமே அது என தெரிவித்துள்ள அவர் நாங்கள் எவரும் வேறு எவரையும் இலக்குவைப்பதற்காக எங்கள் நாட்டை பயன்படுத்த அனுமதிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களுடன் தலிபான் தீவிரவாதிகள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றியுள்ளதை தொடர்ந்தும் வெளிநாடுகள் தங்கள் தூதுதரகங்களை சேர்ந்தவர்களை வெளியேற்றும் அவசர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதை தொடர்ந்தும் காபுலில் பதற்ற நிலை காணப்படுகின்றது.

காபுலை விட்டு வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here