ஜனாதிபதி செயலகம் முற்றுகை – முற்றாக முடங்கிய காலி முகத்திடல்

0

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலையிலிருந்து மக்கள் ஒன்று திரண்டு கொழும்பு காலிமுகத்திடல் பகுதிக்கு எதிர்ப்புப் பேரணியாக வருகை தந்தனர்.

சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள் காலிமுகத்திடல் பகுதியில் உள்ள ஜனாதிபதி செயலக பகுதியை முற்றுகையிட்டதால் அந்தப் பகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை முழுவதும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் ஒட்டுமொத்த உலகிற்கும் கேட்கக்கூடிய அளவிற்கு மிகவும் வலுவானதாக இருக்கின்றது என இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், எரிபொருள், எரிவாயு மற்றும் பால்மா போன்ற அத்தியாவசியப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

இதனால் அன்றாடம் இவ்வாறான பொருட்களைக் கொள்வனவு செய்ய மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் பெறுமை இழந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here