ஜனாதிபதி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

0

நாட்டில் பல வருடங்களாக காணப்படும் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக அனைத்துக் கட்சிகளையும் சந்திப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று அது தொடர்பில் அறிவித்த ஜனாதிபதி, அது தொடர்பில் அனைத்துக் கட்சிகளிடமும் நேரடியாக நிலைப்பாட்டைக் கோரினார்.

வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நிறைவடைந்த பின்னர், டிசம்பரில் அந்த கலந்துரையாடலை நடத்தலாம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இவ்வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் முற்போக்குக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஐக்கிய மக்ககள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் அதற்கு இணங்குவதாக தெரிவித்தனர்.

மகிந்த ராஜபக்‌ஷவும் அதற்கு இணங்குவதாக கூறினார்.

இதன்படி வரவு செலவுத் திட்ட விவாதம் டிசம்பர் 8 ஆம் திகதி நிறைவடைந்த பின்னர் அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப் பேசுவோம் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here