ஜனாதிபதியுடனான சந்திப்பையடுத்து ஜீவன் தொண்டமானும் இராஜினாமா?

0

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.

இதன்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி சாதகமான பதில்களை வழங்கி இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்த சந்தேகம் உள்ளதாக ஜீவன் தொண்டமான் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கட்சியாக ஒரு தீர்மானம் எடுத்து தான் பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அதற்கான கடிதம் ஏற்கனவே பிரதமருக்கு அனுப்பப்பட்டு, ஜனாதிபதிக்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜீவன் தொண்டமான் அந்த ஊடகத்திடன் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here