ஜனாதிபதியின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி

0

தற்போதைய சூழ்நிலையை கவனத்தில் கொண்டு, அனைவருக்கும் நியாயமான தீர்ப்பை வழங்கக்கூடிய ஒரு திட்டத்தை நோக்கி ஒன்றுபட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விசாக பூராணை தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று உன்னதமான நிகழ்வுகள் நடந்த மகத்தான விசாகப்பூரணை தினத்தை நினைவுகூர்ந்து, இலங்கை பௌத்த மக்கள் உட்பட உலகெங்கிலும் வாழும் பௌத்தர்கள் பூஜை வழிபாடுகள் மற்றும் புண்ணிய கிரியைகளில் ஈடுபடுகின்றனர்.

புத்த பெருமான் போதித்த போதனைகள் 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைபெற்றுள்ளது.

கடினமான சூழ்நிலைகளில் விடாமுயற்சியுடன் இருங்கள்.

நாடு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இந்த தருணத்தில் அனைத்துப் பிரஜைகள் சார்பாக, சகல மக்கள் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து, தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

முதன்மை இலக்கிலிருந்து விலகாமல் எதிர்பார்த்த இலக்கை அடைவதே ஒருமைப்பாட்டு இலக்காக இருக்க வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையை கவனத்தில் கொண்டு, அனைவருக்கும் நியாயமான தீர்ப்பை வழங்கக்கூடிய ஒரு திட்டத்தை நோக்கி ஒன்றுபட வேண்டும்.

கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஒழுக்கநெறியுடைய, சமயம் சார்ந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதே அனைவரின் பொதுவான குறிக்கோளாக அமைய வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here