ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைக்கப்பட்டது !

0

நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் வரும் ஜனவரி மாதம் வரையில் ஒத்திவைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஅறிவித்துள்ளார்.

அதற்கமைய, இந்த விடயம் தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்  ஜனாதிபதியினால், விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய தீர்மானம் எடுக்கப்பட்டு, இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, 2022ஆம் ஆண்டுக்கான புதிய நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு மீள ஆரம்பமாகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஅறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here