ஜகமே தந்திரம் படத்தின் மாஸான டிரெய்லர் வெளியானது

0

பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில், இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரெய்லர், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக அதில் தனுஷ் பேசும் ‘சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ என்ற வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதால் அதிருப்தியில் இருந்த தனுஷ், இப்படம் குறித்த எந்தவித தகவலையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிராமல் இருந்து வந்தார். ஆனால் தற்போது ஜகமே தந்திரம் டிரெய்லரை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here