சொந்தப்படம் எடுக்கின்றார் கீர்த்தி சுரேஷ்: ‘மாரி 2’ நடிகர் தான் ஹீரோ!

0

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் சொந்த படம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் அவர்கள் மலையாளத் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் என்பதும் அவரது தயாரிப்பில் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தாலும் நாயகியாக இன்னும் நடக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் தனது சொந்த பேனரில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘வாஷி’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை அவரது சகோதரி ரேவதி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கீர்த்தி சுரேஷ் தயாரிக்கும் முதல் படத்தில் ஹீரோவாக டொவினோ தாமஸ் நடிக்க உள்ளார். இவர் பிரபல மலையாள நடிகர் என்பதும் தமிழில் ‘மாரி 2’ உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கோபாலகிருஷ்ணனின் மகன் விஷ்ணு என்பவர் இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here