சைனோபாம் தடுப்பூசி செலுத்திய இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

0

இலங்கையின் சீன தயாரிப்பான சைனோபாம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் வெளிநாடு செல்ல முடியாத நிலைமை எதுவும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் இயக்குனர் விசேட வைத்தியர் ரஞ்ஜித் பட்டுவத்துடாவ இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.

சைனோபாம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்காத நாடாக இருந்தாக இருந்தாலும் குறித்த நாடு வழங்கியுள்ள செயற்பாடுகளை பின்பற்றி அந்த நாட்டிற்குள் நுழைய முடியும்.

வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கைக்கமைய 140 நாடுகள் வெளியிட்டுள்ள கொவிட் வழிக்காட்டல்களை பின்பற்றி வெளிநாடுகளுக்கு செல்ல முடியும். அதற்கமைய அங்கு சென்று தனிமைப்படுத்திக் கொள்ள முடியும்.

அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் கட்டாய தடுப்பூசி நடவடிக்கைகளை அறிவிக்கவில்லை. அந்த நாடுகளுக்கு சென்று 10 நாட்கள் தனிமைப்பட வேண்டும். சில சந்தர்ப்பங்களில் அந்த நாட்டு தடுப்பூசிகள் இங்கிருந்து செல்பவர்களுக்கு வழங்கப்படலாம்.

சைனோபாம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாததென் நிலைமை இல்லை.

சுவீடன், ஹங்கேரியா, கனடா, நெதர்லாந்து, ஈராக், ஜோர்தான் மாலைத்தீவு, வடகொரியா, கட்டார், பாகிஸ்தான், இந்தோனேஷியா உட்பட நாடுகள் பல சைனோபாம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளதென சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் இயக்குனர் விசேட வைத்தியர் ரஞ்ஜித் பட்டுவத்துடாவ மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here