சேதன பசளை உற்பத்தி குறைபாடுகள் தீர்க்கப்படும்- அமைச்சர் டக்ளஸ்

0

சேதன பசளை உற்பத்தி செய்வதிலுள்ள குறைபாடுகள், விரைவில் தீர்க்கப்படுமென கடற்தொழில் நீரியல்வழங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட அவர், அங்கு ஊடகவியலாளர்களை சந்தித்தப்போது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மக்கள் நலன் கருதியே இரசாயன பசளைக்கு பதிலாக சேதன பசளைகளை உற்பத்தி செய்யும் திட்டத்தினை அரசாங்கம் செயற்ப்படுத்தியதாக அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில் சேதன பசளைகளை உற்பத்தி செய்யும் திட்டத்தினை எதிர்வரும் வருடத்தில் இருந்தே முழுமையாக அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செயற்றிட்டத்தினை முன்னெடுப்பதில் உள்ள குறைபாடுகள் எல்லாம் விரைவில் தீர்க்கப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here