செல்லப் பிராணிகளை வளர்க்கும் பிரித்தானியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமம்…!

0

பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ளது காணப்படுகின்றது.

அதனால் செல்லப் பிராணிகளை வளர்ப்போர் அவற்றை பராமரிப்பதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

விலங்குகளைத் தத்தெடுப்போர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

விலங்குநல அமைப்புகள் மேலும் அதிகமான விலங்குகளைப் பராமரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

செல்லப்பிராணிகளுக்கான உணவு விலைகள் கடந்த சில மாதங்களில் 30 விழுக்காடுவரை அதிகரித்திருக்கின்றது.

இந்நிலையில், சிலர் அவற்றைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

நாய்களைக் கொடுக்கவிரும்புவது குறித்த அழைப்புகளின் விகிதம் இவ்வாண்டு கிட்டத்தட்ட 50 விழுக்காடு அதிகரித்துள்ளதாக நாய்கள் நல அறக்கட்டளை ஒன்று கூறுகிறது.

செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்காகும் செலவே பிரித்தானியர்களின் ஆகப் பெரிய கவலையாக மாறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here