செல்பி மோகம்! மூன்று இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

0
Accident on railway. Rubber boots lying on the railroad

இந்தியாவில் செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள செட்டிபுண்ணியம் பாரதியார் தெருவைச் சேர்ந்த அசோக்(24), மோகன்(17) பிரகாஷ்(17) இவர்கள் 3 மூன்று பேரும் நண்பர்கள்.

இவர்கள் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவு செய்து வருவது வழக்கம்.

இந்நிலையில் இன்று வழக்கம்போல் மாலை தாம்பரம் செங்கல்பட்டு இடையே மூன்றாவதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் இருப்புப் பாதையில் அமர்ந்து இன்ஸ்டாகிராமிர்க்கு பதிவு செய்வதற்காக வீடியோக்களை எடுத்துள்ளனர்.

அப்பொழுது சென்னை தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லக்கூடிய விரைவு ரயில் வந்து கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரயில் மோதி விபத்தில் அசோக், மோகன், பிரகாஷ், ஆகிய மூன்று இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த ரயில்வே காவல் துறையினர் மூன்று இளைஞர்களுடைய சடலங்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செல்பி மோகத்தால் ஒரே தெருவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் ரயிலில் மோதிய விபத்தில் உயிரிழந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here