செல்பி புகைப்படம் எடுக்க முயன்ற இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த கதி

0

பிபிலை கரம்மிட்டிய மலையில் செல்பி புகைப்படம் எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் சுமார் 80 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பிபிலை பொலிஸார் தெரிவித்தனர்.

பிபிலை மெதகம பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான ஏ.எம் .அகில என்ற இளைஞரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தன் நண்பர்களுடன் மொனராகலை பகுதியில் காணப்படும் பிபிலை கரமிட்டிய மலைப் பகுதிக்கு சென்ற வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைகளுக்காக பிபிலை பிரதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபிலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here