செல்ஃபி மோகத்தால் மருத்துவ மாணவிக்கு நேர்ந்த கதி…. அதிர்ச்சியில் குடும்பம்

0

இந்தியாவில் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நேஹா அர்சி. சிலிக்கான் சிட்டி பகுதியில் வசிந்த வந்த இவர் சாகர் மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.

நேஹா தினமும் வழக்கமாக நடைப்பயிற்சி மேற்கொள்வார்.

நேற்று நேஹா மற்றும் அவரது சகோதரர் இருவரும் நடைப்பயிற்சி சென்றுள்ளனர்.

அப்போது லேசான மழை பெய்துள்ளது.

நேஹாவின் சகோதரர் அருகில் இருக்கும் கடைக்கு சென்று சிப்ஸ் வாங்கி வருவதாக கூறி சென்றுவிட்டார்.

மழையின் காரணமாக க்ளைமேட் நன்றாக இருந்ததால் தன்னுடைய மொபைல் போனில் நேஹா புகைப்படம் எடுக்க விரும்பியுள்ளார்.

பாலத்தின் மீதிருந்த சுவரில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது நிலைத்தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டார்.

இதில் அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நேஹாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேஹாவின் மரணம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here