செல்ஃபியால் வெளிநாட்டு தம்பதியினருக்கு சுரங்கப்பாதையில் நேர்ந்த துயரம்!

0

சுற்றுலாவுக்காக இலங்கை வந்திருந்த பிரான்ஸ் தம்பதியொன்று உடரட்ட மெனிக்கே புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

ஒஹியா மற்றும் இதல்கஸ்ஹின்ன பிரதேசத்திற்கு இடைப்பட்ட சுரங்கப்பாதைக்கு அருகாமையிலேயே இவ்வாறு தவறி விழுந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த இரு பயணிகளும் தியத்தலாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புகையிரதத்தில் கதவுக்கு அருகாமையில் செல்ஃபி எடுக்க முற்பட்ட போது பெண் முதலில் கீழே விழுந்துள்ளதாகவும், அவரைக் காப்பாற்றுவதற்காக அவரது கணவன் கீழே குதித்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த இருவரையும் அதே புகையிரதத்தில் ஹப்புத்தளை புகையிரத நிலையத்திற்கு அழைத்து சென்று, அங்கிருந்து தியத்தலாவை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here