செயற்கை இனிப்பூட்டிகளால் ஏற்படவுள்ள அபாயம்… ஆய்வு முடிவுகள்

0
A box with fresh homemade donuts with icing.

பிரான்சில் செயற்கை இனிப்பூட்டிகளால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பிரெஞ்சு ஆய்வாளர்கள் மேற்கொண்ட அந்த ஆய்வின் முடிவுகள், செயற்கை இனிப்பூட்டிகளை உணவில் சேர்த்துக்கொள்வதால் புற்றுநோய் உருவாகும் அபாயம் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளன.

இந்த ஆய்வில் 100,000க்கு அதிகமான தன்னார்வலர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் உடல் நலன் ஆகியவை, பத்து ஆண்டுகளுக்கு கண்காணிக்கப்பட்டன.

அந்த ஆய்வின் முடிவில், அதிக அளவில் செயற்கை இனிப்பூட்டிகளை எடுத்துக்கொண்டவர்கள்.

குறிப்பாக aspartame மற்றும் acesulfame-K என்னும் இனிப்பூட்டிகளை எடுத்துக்கொண்டவர்களுக்கு புற்றுநோய் உருவாகும் அபாயம் அதிகம் உள்ளது.

குறிப்பாக மார்பக மற்றும் உடல் பருமன் தொடர்பான புற்றுநோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது.

இந்த இனிப்பூட்டிகளில் சில பெரும்பாலான குளிர்பானங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

ஆகவே, தங்கள் ஆய்வு, செயற்கை இனிப்பூட்டிகளால் புற்றுநோய் உருவாகும் என தெரிவிக்கவில்லை.

அது தொடர்பில் மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன பிரான்ஸ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here