சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் யார்…?

0

இந்த வருடம் 2022 ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெறுகிறது.

இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசிக்காக தற்போதைய கேப்டனாக இருக்கும் தோனி சென்னை வந்துள்ளார்.

ஆனால், அவர் இந்த ஆண்டு கேப்டன் பதவியில் தொடருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் தலைவர் பதவியை ஜடேஜாவிடம் கொடுத்துவிடுவாரா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

அதற்கு முக்கிய காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் ரீட்டெயின் லிஸ்டில் தோனியின் பெயர் இரண்டாவதாக இடம்பெற்றிருந்தது.

முதல் இடம் ஜடேஜாவுக்கு கொடுக்கப்பட்டு 16 கோடிக்கு அவரை சென்னை அணி தக்கவைத்துக் கொண்டது.

அணியின் கேப்டனாக இருக்கும் தோனி, 12 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டார்.

இதனால், இந்த ஆண்டு முதல் கேப்டன் பொறுப்பை ஜடேஜாவுக்கு கொடுக்கும் வகையில் தோனி மற்றும் சென்னை அணி நிர்வாகம் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக கூறப்பட்டது.

தோனியும் தனக்கு பிறகு சரியான கேப்டனை அணிக்கு கொடுக்கும் பொருட்டு இந்த முடிவை எடுத்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த தகவல்கள் தல தோனியின் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தோனிக்கு பதிலாக புதிய கேப்டன் நியமிக்கும் முடிவை கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், எதிர்வரும் ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தல தோனி தலைமையிலேயே களமிறங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here