செஞ்சோலை படுகொலை நினைவுதினம் யாழில் அனுஷ்டிப்பு

0

செஞ்சோலையில் இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சினால் படுகொலை செய்யப்பட்ட 54 மாணவிகள், 7 பணியாளர்கள் உட்பட 61 தமிழ் உறவுகளின் 15 வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் – செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவுதினம் தமிழ் தேசிய கட்சியினால் இன்றைய தினம் (14) அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். வல்வெட்டித்துறையிலுள்ள தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்திற்கு முன்னால் குறித்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

செஞ்சோலை இனப்படுகொலை, 150 ற்கும் மேற்பட்ட மாணவிகளைப் படுகாயப்படுத்திய போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை நிகழ்த்திய இலங்கை அரசின் குற்றவாளிகளைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே சிவாஜிலிங்கம் இதன்போது வலியுறுத்தினார்.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here