அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை திங்கள்கிழமை அன்று பயங்கரமான புயல் தாக்கியது.
புயலால் வீசிய சூறாவளி காற்றில் மரங்கள், வீடுகள் மின் இணைப்புகள் என அனைத்தும் பலத்த சேதமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வானிலை ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிவிப்பில்,
இந்த புயல் கடுமையான இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையை ஏற்படுத்தும் எனவும், பலத்த காற்று வீசும் எனவும் எச்சரித்து இருந்தது.
டெக்ஸான் நகரங்களான ஜாக்ஸ்போரோ, லுலிங் மற்றும் ரவுண்ட் ராக் மற்றும் ஓக்லஹோமாவில் உள்ள கிங்ஸ்டன் ஆகிய பகுதிகளை தாக்கியுள்ளது.
இந்த புயல் கிட்டத்தட்ட 45,000 பொதுமக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு கடும் இன்னலுக்கு உள்ளாகி இருப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த புயல் அமைப்பானது மேலும் பல சூறாவளி காற்றை உருவாகும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவின் தேசிய வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.
இதனிடையே, டெக்சாஸை மாகாணத்தை தாக்கிய புயல் சாலையில் சென்று கொண்டிருந்த காரை தூக்கி தலைகீழாக உருட்டியது.
இந்நிலையில், அந்த கார் மீண்டும் சாலையில் சாதரணமாக சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுதொடர்பான வீடியோ காட்சி சமூகவலைத்தளத்தில் வைரல் ஆகிவருகிறது.