சூர்யா 40 படத்தின் கதை இதுவா?

0

சூரரைப்போற்று படத்துக்கு பிறகு பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தை தற்சமயம் சூர்யா 40 என்று அழைத்து வருகிறார்கள். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதிகளில் நடந்த நிலையில், கொரோனா ஊரடங்கினால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

பாண்டிராஜ் படம் என்பதால் இது கிராமத்து கதையம்சத்தில் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாக புதிய தகவல் கசிந்துள்ளது.

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாட்டையே உலுக்கியது. பல இளம் பெண்களை சீரழித்து வீடியோ எடுத்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை திரைக்கதையாக உருவாக்கி, படமாக்கி வருவதாகவும் பாலியல் குற்றவாளிகளை தேடிப்பிடித்து தண்டிக்கும் கதாபாத்திரத்தில் சூர்யா நடிப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் படக்குழுவினர் தரப்பில் இந்த தகவல் பொய்யானது என்று கூறப்படுகிறது. இப்படத்தின் கதை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here