சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்…

0

சூர்யா 40’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கைத் தொடர்ந்து இரண்டாவது போஸ்டரும் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா தற்போது ‘சூர்யா 40’ படத்தில் நடித்து வருகிறார். நடிகை பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

இன்று சூர்யா நாளை தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு நேற்று சூர்யா 40 படத்திலிருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது. அந்தப் படத்திற்கு எதற்கும் துணிந்தவர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 1976-ம் ஆண்டு சூர்யாவின் தந்தை சிவகுமார் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளியான போஸ்டரில் சூர்யா கையில் வாள் மற்றும் துப்பாக்கியுடன் என்ட்ரி கொடுக்கிறார். மேலும் பலரை துப்பாக்கி மற்றும் வாள் கொண்டு துவம்சம் செய்கிறார். இறுதியாக மிரட்டலான தோற்றத்தில் காணப்படுகிறார்.

அதையடுத்து ரசிகர்களுக்கு மற்றுமொரு ட்ரீட் ஆக இரவு 12 மணிக்கு இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. இரண்டாவது போஸ்டரிலும் கையில் வாளுடன் ரத்தம் தெறிக்க சூர்யா ஆக்ரோஷமாக காணப்படுகிறார். நீண்ட நாட்களுக்குப் பிரேக் சூர்யாவின் அதிரடி ஆக்ஷனை ரசிகர்கள் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்திலிருந்து வெளியான இரண்டு போஸ்டர்களும் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

suriya-89

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here