சூர்யா பட பாடலுக்கு கண் கலங்கிய சூப்பர் ஸ்டார்

0

சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி ஆகியோரின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. சமீபத்தில் நடந்த மெல்பெர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று படத்துக்கு இரண்டு விருதுகள் கிடைத்தன.

இந்நிலையில், சூரரைப்போற்று படத்தின் கிளைமேக்ஸில் இடம்பெறும் ‘கையிலே ஆகாசம்’ பாடல் வீடியோவை பார்த்தபோது தன்னால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், தன்னை மீறி கண்ணீர் விட்டதாகவும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் நடிகர் சூர்யாவை தென்னிந்திய சூப்பர் ஸ்டார் எனவும் புகழாரம் சூட்டி உள்ளார். ‘கையிலே ஆகாசம்’ பாடல் பார்த்து பாராட்டிய நடிகர் அமிதாப் பச்சனுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here