சூர்யாவின் ’’ஜெய்பீம்’’ படம் புதிய சாதனை

0

நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படத்திற்கு ஐ.எம்.டி.பி( imdp) வலைதளத்தில்புதிய சாதனை படைத்துள்ளது.

நடிகர் சூர்யா நடித்து தயாரித்துள்ள படம் ஜெய்பீம். இப்படத்தை த.செ. ஞானவேல் இயக்கியுள்ளார். இப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நடிகர்களும், பிரபல இயக்குநர்களும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில்,ஜெய்பீம் திரைப்படம் ஐஎம்டிபி (imdp) வலைதளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது. பழங்குடி மக்களுக்கு போலீஸாரால் ஏற்பட்ட பாதிப்புகளை இப்படம் கூறுவதால் பலதரப்பினர் இடையே பாராட்டப்பட்டு வருகிறது.

தற்போது ஐஎம்டிபி என்ற வலைதளத்தில் உலகளவில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற முதல் 250 படங்களின் பட்டியலில் நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படம் இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here