சூரியனின் உண்மையான நிறம்! ஆய்வு தகவல்

0

சூரியனின் உண்மையான நிறம் வெண்மையானது என்று அமெரிக்க தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் முன்னாள் விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சூரியனின் உண்மையான நிறம் வெண்மை.

அது பூமியில் இருந்து பார்க்கும் போது மஞ்சளாக இருப்பதற்கு காரணம் நமது வளிமண்டலம் தான் என்றும் நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் ஸ்கொட் கெலி தெரிவித்துள்ளார்.

விண்வெளியில் சூரியனைப் படம் எடுக்கும் போது, அது வெண்மையாகத் தான் இருக்கிறது.

சூரிய ஒளிக்கற்றையில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான நிறங்களும் ஒன்றிணைந்து அது வெண்மையாகத் தான் தோற்றமளிக்கும்.

நீண்ட அலைவரிசை ஒளியான சிவப்பால் தான் அது மஞ்சளாக தெரிகிறது.

சாதாரண கண்களுக்கு சூரியனின் உண்மையான நிறத்தை கண்டறிவது கடினம்.

புவியின் வளிமண்டலத்திற்கு வெளியே சூரியனின் உண்மையான நிறத்தையும், நிறங்கள் மாற்றமடையும் சூட்சுமத்தையும் கண்டறிய முடியும்.

100 ஔியாண்டுகள் தொலைவில் “சுப்பர் அர்த்” என்றழைக்கப்படும் உயிர் வாழ்க்கைக்கு உகந்ததாக கருதப்படும் இரட்டை கிரகங்களில் ஒன்று விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர் இதனை கண்டறித்துள்ளதுடன், அதற்கு ஸ்பெகியூலோஸ் -2 என்று பெயரிடப்பட்டுள்ளது.

குறித்த கிரகம் பூமியை விட 30 மடங்கு வரை விசாலமானது என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நாசாவின் டெஸ் விண்கலத்தின் ஊடாக குறித்த கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here