சூட்கேஸில் துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல்… பொலிஸார் அதிரடி

0

பிரித்தானியாவில் Gloucestershire பகுதியில், அதிவேகமாக ஒரு கார் செல்வதைக் கவனித்த ஒருவர், பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து காரை பின்தொடர்ந்து சென்ற பொலிசார், குவாரி ஒன்றின் அருகே அந்த கார் நிற்பதையும், சந்தேகத்துக்குரிய வகையில் இருவர் அங்கு நிற்பதையும் கவனித்துள்ளனர்.

அங்கு இரண்டு சூட்கேஸ்கள் கிடப்பதைக் கவனித்த பொலிசார், அவற்றை சோதனையிடும்போது, ஒரு பெண்ணின் உடல் இரண்டு துண்டாக்கப்பட்டு அந்த இரண்டு சூட்கேஸ்களில் வைக்கப்பட்டுள்ளதைக் கவனித்துள்ளார்கள்.

இந்த கோர சம்பவத்தைத் தொடர்ந்து, Gareeca Conita Gordon (28) என்ற பெண்ணும், Mahesh Sorathiya என்ற ஆணும் கைது செய்யப்பட்டனர்.

கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் Phoenix Netts 28 என்றும், அவரும் Conitaவும் ஒரே ஹாஸ்டலில் தங்கியிருந்ததும், போதைப்பொருளுக்காக சண்டையிடும்போது Phoenixஐ Conita கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

Phoenix கொல்லப்பட்ட பின்னரும், அவரது மொபைலிலிருந்து அவரது குடும்பத்தாருக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்பி, அவர் உயிருடன் இருப்பது போலவே காட்டிக்கொண்டிருந்திருக்கிறார் Conita.

ஆனால், தான் வீசிய உடலுக்கு என்ன ஆயிற்று என்பதைப் பார்ப்பதற்காக அடிக்கடி அந்த குவாரிக்கு சென்று பார்த்துவந்துள்ளார் Conita.

அப்படி செல்லும்போதுதான் பொலிஸாரிடம் சிக்கிக்கொண்டுள்ளார்.

Conita நேற்று காணொலி மூலம் நீதிபதி முன் ஆஜரான நிலையில், மே மாதம் 4ஆம் திகதி அவரது தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here