சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்

0

எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகள் பல உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு அரசியல் தலைவர்கள் இணைந்து 7 அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகளை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் டலஸ் அழகப்பெரும தலைமையில் இரண்டு கூட்டணிகள் உருவாக்கப்பட உள்ளன.

இதேவேளை, அமைச்சர்களான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கலாநிதி சரத் வீரசேகர மற்றும் ரொஷான் ரணசிங்க ஆகியோர் மேலும் அரசியல் கட்சிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவை அனைத்திற்கும் மேலாக அண்மையில் அரசாங்கத்தில் இணைந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் காலிமுகத்திடல் அனைத்துக் கட்சி செயற்பாட்டாளர்களும் இணைந்து இரண்டு புதிய அரசியல் கூட்டணிகளை உருவாக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் பல அரசியல் குழப்பங்கள் இடையில் நடக்க உள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய அமைச்சரவை அமைச்சர் ஒருவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இவர்கள் மூவரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here