சுவிஸ் மாகாணம் ஒன்றின் அறிமுகப்படுத்தியுள்ள புதிய திட்டம்

0

சுவிட்சர்லாந்தில் சூரிச் மாகாணத்தில் வாழும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க முடிவு செய்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் மற்ற மாகாணங்கள் எதுவுமே தங்கள் மாகாணத்தில் வாழ்பவர்கள் தவிர்த்து வேறு யாருக்கும் தடுப்பூசி வழங்குவதில்லை என அறிவித்துள்ளது..

ஆனால், சூரிச் மாகாண சுகாதாரத்துறையோ, தங்களுக்கு பெருமளவில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட இருப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தங்களால் இந்த சலுகையை அளிக்க முடிவதாக தெரிவித்துள்ளது.

அத்துடன், விரைவாக அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது நாட்டு மக்கள் அனைவருக்குமே நல்லது என்பதால் இதை தாங்கள் செய்வதாகவும் சூரிச் மாகாண சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அவ்வகையில், சூரிச் மாகாணம், சுவிட்சர்லாந்தில் எங்கு வசிப்பவர்களானாலும், 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்க முடிவுசெய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here